திருப்புத்தூர்:திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நாளை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழா, நவ.3ல் துவங்கியது.தினசரி மாலை 6 மணிக்கு முருகனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்து வருகிறது. மாணவ,மாணவிகளின் கந்தசஷ்டிப் பாடல் ஒப்புவிக்கும் போட்டி நடந்தது. இன்று காலை 10.30 மணிக்கு முருகனுக்கு சண்முகா அர்ச்சனை நடைபெற்று,சிறப்பு அபிஷேக,ஆராதனை நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு,கீழரதவீதி, பிள்ளையார் தேர் முன்பாகசூரசம்ஹாரம் துவங்குகிறது. நாளை காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.பின்னர், திருக்கல்யாணம் காலை 10.35லிருந்து பகல் 11.45 மணிக்குள் நடைபெறும்.ஏற்பாட்டினை திருமுருகன் திருப்பேரவையினர் செய்கின்றனர்.