பரமக்குடி: தரைப்பாலம் அருகில் உள்ள, வள்ளி தேவசேனா சமேத, சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று(நவ.8) இரவு 7 மணிக்கு கோயில் முன்பாக, சூரனை வதம் செய்யும் காட்சி நடைபெறும். நாளை(நவ.9) காலை 11 மணி முதல் 12மணிக்குள், சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை திருக்கல்யாணமும், இரவு புஷ்பப்பல்லக்கில் பட்டணப்பிரவேசம் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் கிருஷ்ணமூர்த்தி, ராமலிங்கம், கிருஷ்ணன், குப்புசாமி, சாந்தாராம் செய்து வருகின்றனர். ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயில், பெருவயல் ரணபலி முருகன் கோயிலில் இன்றிரவு சூரசம்ஹாரம் நடக்கிறது.