திருமலையில் நவ.24-ஆம் தேதி கார்த்திகை மாத வனபோஜனம் நடைபெறும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 1இம்மாதம் கார்த்திகை மாத பெüர்ணமி அன்று நடைபெற உள்ள நம்கோயில் திட்டத்துக்காக வரும் 11-ஆம் தேதியும், கார்த்திகை மாதத்தை சிறப்பிக்கும் வகையில் வரும் 24-ஆம் தேதியும் கார்த்திகை மாத வனபோஜனத்தை தேவஸ்தானம் நடத்த உள்ளது. அன்றைய தினம் மலையப்பஸ்வாமி யானை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி தங்கபல்லக்கில் உடன் வர பாபவிநாசம் செல்லும் மார்கத்தில் உள்ள பார்வேட்டு மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.