தட்சண காலபைரவர் கோயிலில் முன்மண்டபம் கட்டும் பணி தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2013 11:11
தருமபுரி: அதியமான்கோட்டையில் உள்ள தட்சண காலபைரவர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியையொட்டி ராகு கால சிறப்புப் பூஜை நடைபெறும். இந்தக் கோயிலின் முன் தற்போது இந்து அறநிலையத் துறை சார்பில் முன்மண்டபம் கட்டுவதற்காக , 13-ஆவது நிதி ஆணையம் மூலம் இதற்காக ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் மண்டபம் அமைக்க பூர்வாங்கப் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.