பதிவு செய்த நாள்
09
நவ
2013
11:11
சிவகங்கை: சிவகங்கை விஸ்வநாதசுவாமி கோயிலில், ரூ.36 லட்சம் செலவில் புனரமைப்பு பணி செய்வதற்கான, பூமி பூஜை நேற்று நடந்தது. இக்கோயிலில், விஸ்வநாதர், அம்பாள், விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, ஐயப்பன், சனீஸ்வரர்களுக்கென தனித்தனி சன்னதி உள்ளது. இவற்றில்,சில கோயில் கோபுரங்களை புனரமைப்பு செய்வதற்கான பணிகளில், சிவகங்கை தேவஸ்தான நிர்வாகம் இறங்கியுள்ளது. திருப்பணி குழு தலைவர் சேக்கப்பன் செட்டியார் தலைமையில், குழு அமைத்து, உபயதாரர்கள் வழங்கும் தொகையில், சுமார் ரூ.36 லட்சத்தில், கோபுரங்களை புனரமைப்பு செய்து, கும்பாபிஷேகம் செய்வதற்கான,பூமிபூஜை நேற்று நடந்தது. சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ தலைமை வகித்தார். கோயில் கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஏற்பாட்டை செய்தார்.
சூரசம்ஹாரம்: கந்தசஷ்டி விழாவின், 6ம் நாளான நேற்று, சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி, வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாலை 5.30 மணிக்கு, கோயில் முன், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.