பதிவு செய்த நாள்
11
நவ
2013
11:11
திசையன்விளை: திசையன்விளை கற்பக விநாயகர் ஆலய வருஷாபிஷேக விழா வரும் (15ம் தேதி) நடக்கிறது. திசையன்விளை பஸ்ஸ்டாண்ட், கற்பக விநாயகர் ஆலய வருஷாபிஷேக விழா வரும் 15ம் தேதி நடக்கிறது. விழாவில் காலையில் மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், மஹாகணபதி மூமந்திர ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை, சுவாமிக்கு சகலாபிஷேகம், விமானம் மற்றும் மூலால கும்பாபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவையும், மதியம் அன்னதானமும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை நெல்லை முருகேசன், ஜெயராமன், கணேசன், சுகுமார், பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.