ஆத்தூர்,: ஆத்தூரில் கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹாரம் நடந்தது.ஆத்தூர் சோமநாதசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா 3ம் தேதி துவங்கியது. விழாவை ஒட்டி ஹோமகுண்டம் வளர்க்கப்பட்டு சுப்பிரமணியருக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. 6ம் நாளான கந்தசஷ்டி தினத்தன்று சுவாமி கோயிலிலிருந்து ரதவீதிகள் வழியே வீதி உலா வந்தார். பின்னர் ஆத்தூர் பஞ். அலுவலகம் முன்பு முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. அன்று மாலை சுவாமி அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும், திருவீதி உலாவும், இரவு 10 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் ராஜேந்திரன் மற்றும் நிாவாகிகள் செய்திருந்தனர்.