Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆயுள் கெட்டி! பூஜையறையில் ஏற்றும் விளக்கை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முடியாதது எதுவுமே இல்லை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2013
12:11

*கொழுந்து விட்டெரியும் நெருப்பாக இருங்கள். வாழ்வில் எதிர்ப்படும் ஒவ்வொரு நிகழ்வும் நமது முன்னேற்றத்திற்கு உதவுவதற்காகவே என்று எண்ணுங்கள்.
* உங்கள் செயல்கள் மகிழ்ச்சி அளிப்பதாய் இருக்கட்டும். ஆனால், உங்களுக்குடைய சொந்த மகிழ்ச்சிக்காக எதையும் செய்யாதீர்கள்.
*பரபரப்பு, கலகம், பதட்டம் இவற்றைத் தவிர்த்து விடுங்கள். எந்தச் சூழ்நிலையிலும் பூரண அமைதியைக் கடைபிடியுங்கள்.
*பிறரிடம் காணப்படும் குறைகளை மாற்றும் ஆற்றல் உங்களிடம் இருந்தால் அன்றி, யாரையும் குறை சொல்ல முயலாதீர்கள்.
*உங்கள் முன் வைத்திருக்கும் லட்சியத்தை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். அதைநோக்கி முன்னேறும் விதத்தில் செயல்படுங்கள்.
*சொற்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். மிக அவசியம் இருந்தால் ஒழிய பேச வேண்டாம்.
*தளராத முயற்சி உங்களுக்குள் உணர்ச்சியைத் தூண்டும். அதன் மூலம் இறை அருளாகிய திவ்ய ஒளி உங்கள் மீது படும்.
*உங்கள் வாழ்விற்கு நீங்களே எஜமானர், தலைவர் என்பதை உணருங்கள்.
*உள்ளத்து உறுதியும், பெருமித உணர்வும் கொண்டு உங்கள் பாதையில் நடைபோடுங்கள்.
*அச்சம் நோயை விட பயங்கரமானது. ஆபத்தும் கொண்டது. அதுவே உங்களிடமிருந்து களையப்பட வேண்டிய முதல் குறைபாடு.
*நேர்மை, பொறுமை, வலிமை இவற்றைப் பயன்படுத்தி அச்சத்தின் நிழல் கூட இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
*எப்போதும் நல்லதையே எண்ணி செயல்படுகின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
*அன்பு உள்ளத்தில் ஊற்றெடுக்கட்டும். எதிர்மறையான விஷயங்களைக் கைவிடுங்கள். எங்கும் கடவுளின் அருட்காட்சியை மட்டும் காணுங்கள்.
*உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்களைச் சுற்றிலும் அமைதி, நம்பிக்கை, மகிழ்ச்சி மிக்க சூழ்நிலையை உருவாக்க முயலுங்கள்.
*எந்த சூழ்நிலையிலும் கடவுளின் பக்கம் நில்லுங்கள். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் உண்மையை கைவிட்டு விடாதீர்கள். உண்மைக்காக போராடுவதே உண்மையான வீரம்.
*முன்னேறுவதற்காகவே நாம் பூமியில் பிறந்திருக்கிறோம். ஒவ்வொரு நிமிடமும் நாம் முன்னேறாவிட்டால் வாழ்க்கையே சுவாரஸ்யமற்றதாகி விடும்.
*உழைப்பே கடவுளுக்கு மிகவும் விருப்பமான பிரார்த்தனை. ஒருபோதும் மனிதன் மற்றவர் உழைப்பில் வாழ முற்படுவது கூடாது.
*துணிவுடன் செயலாற்றுங்கள். நம்பிக்கையைக்கை கொள்ளுங்கள். முடியாது என்று எண்ணாத வரை  முடியாதது எதுவுமில்லை.
*எந்த நிலையிலும் கடவுளின் உதவியை பெற கற்றுக் கொள்ளுங்கள். அது அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டேயிருக்கும்.
*உங்கள் தேவை அனைத்தையும் கடவுள் நிறைவேற்றுவார். உங்களிடமுள்ள பலவீனத்தைப் போக்கி நல்வழிப்படுத்தும் ஆற்றல் அவருக்கு மட்டுமே இருக்கிறது.
*உங்களின் எண்ணம் நேர்மையானதாக இருந்தால், கடவுளின் அன்பைப் பெற முடியும்.
-அன்னை

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar