ஒரு நூல் என்றால், அதில் பத்து விதமான குற்றங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். அவை என்னென்ன தெரியுமா? 1. குறைத்துக்கூறல் 2. மிகைப்படக்கூறல் 3. கூறியது கூறல் 4. மாறுகொளக் கூறல் 5. வழூஉச்சொற் புணர்த்தல் 6. மயங்க வைத்தல் 7. வெற்றெனத் தொடுத்தல் 8. மற்றொன்று விரித்தல் 9. சென்று தேய்ந்திறுதல் 10. நின்று பயன் இன்மை.