பசுவந்தனை: கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பசுவந்தனை கைலாசநாதர் கோயிலில் சுப்பிரமணியர் மற்றும் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாண விழா நடந்தது. பசுவந்தனை ஆனந்தவல்லி அம்மன் சமேத சுயம்பு கைலாசநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவில் தினமும் ரன் உருவ பொம்மைகள் நான்கு ரத வீதிகளிலும் ஆடி செல்ல சுப்பிரமணியர் பல்லக்கில் பவனி வந்து காட்சி அளித்தார். கடந்த 8ந்தேதி இரவு தேரடி திடலில் ‹ர சம்ஹார விழா நடந்தது. இதையடுத்து மறுநாள் திருக்கல்யாண வைபத்தை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தள் பூஜையும், கும்ப கலச பூஜைகளும் நடந்தது. பின்னர் சுவாமி, அம்மன், பாலமுருகன் மற்றும் பரிவார மூர்த்கிளுக்கும் சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடந்தது. மாலையில் உற்சவ மூர்த்திகளான சுப்பிரமணியர் மற்றும் வள்ளி தெய்வானைக்கு 21 வகையான அபிஷேகங்கள் செய்து, அலங்கரிக்கப்பட்டு மணக்கோலத்தில் கோயில் முன்புற மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு மண மேடையில் வைத்து திருமண வைபவம் நடந்தது. தொடர்ந்து சுப்பிரமணியர் மணக்கோலத்தில் சப்பரத்தில் நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.