கயத்தாறு: கயத்தாரில் கந்த சஷ்டி திருவிழா நடந்தது கயத்தாறு திருநீலகண்ட ஈஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முருகப் பெருமானுக்கு தினமும் அபிஷேகமும், அலங்காரமும் நடந்தது. சஷ்டியன்று மாலையில் ‹ரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நகரின் முக்கியமான வீதிகளில் முருகன் ‹ரனுடன் போரிட்டு அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் முருகன் பச்சை பட்டு சாத்தி சப்பர பவனி நடந்தது. அதன்பின்னர் மறுநாள் இரவில் தெய்வானை திருமணம் நடந்தது. மந்திரம் முழங்க முருகன் தெய்வானை மாலை மாற்றி திருமாங்கல்யம் அணிவித்து திருமண வைபோகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டுமொய் வாங்கப்பட்டது. கயத்தாறு மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் திருக்கல்யாண வைபோகத்தில் கலந்து கொண்டனர்.