உலக நன்மை வேண்டி காரைக்குடியைச் சேர்ந்த பக்தர்கள் 108 திருப்பதிகளையும் தரிசிக்க பாதயாத்திரை தொடங்கினர். இக்குழுவினர் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கேரளாவில் இருந்து பாதயாத்திரையைத் தொடங்கினர். இந்த பக்தர்கள் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு தற்போது வருகை தந்துள்ளனர். நடுநாட்டு திருப்பதிகளில் தொன்மையானதாக போற்றப்படும் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.