பதிவு செய்த நாள்
13
நவ
2013
10:11
திருவள்ளூர்: திருவள்ளூர், சத்தியமூர்த்தி தெருவில் உள்ள, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், திருப்பவித்ர உற்சவம், நேற்று துவங்கியது. முதல் நாளான, நேற்று மாலை, அனுக்ஞை, அங்குரார்ப்பணம், வாஸ்து ஹோமம், பூர்ணாஹூதியுடன், விழா துவங்கியது. தினசரி, புண்யாஹவாசனம் அக்னி பிரதிஷ்டையும், திவ்ய பிரபந்த சாற்றுமுறை தீர்த்த பிரசாத வினியோகம் நடைபெறும். பவித்ர உற்சவ திருமஞ்சனம், தினசரி, காலை, 9:00 மணிக்கு நடைபெறும். வரும், 15ம் தேதி, விழா நிறைவு நாளன்று, மாலை, 5:00 மணியளவில், உற்சவர் புறப்பாடு நடைபெறும்.