பசுபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை 14–ந் தேதி நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2013 10:11
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள நாச்சிப்பட்டி கிராமத்தில் புதியதாக பசுபதி அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வருகிற 14–ந் தேதி(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று இரவு 10 மணி அளவில் கிராம சாந்தியுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது 14–ந் தேதி(வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு 4–ம் கால யாக பூஜையும், 8 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் பசுபதி அம்மன் கோபுர கும்பாபிஷேகமும், மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.