மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் திருமாலிருஞ்சோலை, இந்த கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை விழா வருகிற 17–ந்தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெறும். அழகர்மலையில் சுமார் 2 ஆயிரம் அடிக்கு மேல் உள்ள வெள்ளிமலை கோம்பை தளத்தில் திருக்கார்த்திகை தீப குண்டம் அன்று மாலை ஏற்றப்படுகிறது.