திருவண்ணாமலை: பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் இன்று(14ம் தேதி) நடைபெறுகிறது. விழாவின் 7-ம் நாளான வியாழக்கிழமை பஞ்ச ரதங்களின் வீதியுலா தொடங்குகிறது. விநாயகர், முருகர், மகா ரதம் எனப்படும் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் தேர்கள் என 5 ரதங்களின் வீதியுலா நடைபெறுகிறது.