ராமநாதபுரம்: மீனாட்சி அம்பிகை உடனுறை சொக்கநாதசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷகத்தை முன்னிட்டு 9 ஆம் தேதி கணபதி பூஜை மற்றும் நவக்கிரக பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை கன்னிகா பூஜையும்,திங்கள்கிழமை சுமங்கலி பூஜையும் நடந்தன. நேற்று கோமாதா பூஜைக்கு பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.