விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2013 10:11
விருத்தாசலம்: பிரதோஷத்தையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, காலை ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சுப்ரமணியர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் போன்ற 12 சிறப்பு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலைகள் சாற்றி, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.