பதிவு செய்த நாள்
19
நவ
2013 
10:11
 
 மதுரை: மதுரை சிம்மக்கல் தைக்கால் தெருவில், மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலை முழுநேரம் திறக்க கோரி, இந்து ஆலய பாதுகாப்பு குழு சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. பொதுச் செயலாளர் சுந்தரவடிவேல் தலைமை வகித்தார். பொருளாளர் சீனிவாசன், அலுவலக செயலாளர் ராம்குமார் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் சுதாகர், அலுவலக செயலாளர் சண்முக சுந்தரம், இந்து முன்னணி பாண்டியன், பா.ஜ., சசிராமன், தாம்பராஸ் இல.அமுதன், ஆதிசேஷன் மற்றும் பலர் பங்கேற்றனர். கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் கூறுகையில், கோயிலில் ஒருவேளை பூஜை தொடர்ந்து நடந்து வருகிறது. பக்தர்களின் வசதிக்காக, தினமும் காலை, மாலை திறக்கப்படுகிறது. விரைவில், ரூ.25 லட்சத்தில் திருப்பணிகள் நடக்க உள்ளன, என்றார்.