பதிவு செய்த நாள்
19
நவ
2013
10:11
உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. திருநாளையொட்டி, கோவிலில், விநாயகர், முருகன், சிவன் சன்னிதிகளில், காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில், பனை ஓலையால், சாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. சிவனை ஒளிவடிவமாக காண்பிக்கும், இந்நிகழ்ச்சியை பக்தர்கள் திரளாக பங்கேற்று, தரிசித்தனர். நேற்று காலை கோவிலில், கார்த்திகை மாதம் சோமவார 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. சோமவாரத்தையொட்டி, காலை 9:30 மணிக்கு, விநாயகர் பூஜை, கலச பூஜை, சங்கு பூஜை ஹோமம் ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 11.00 மணிக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.