பதிவு செய்த நாள்
19
நவ
2013
10:11
திருத்தணி: வீர ஆஞ்சநேயர் கோவிலில், கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, 108 குடம் பால் அபிஷேகம் நடந்தது. திருத்தணி, மேட்டுத் தெருவில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, 108 குடம் பாலபிஷேக விழா, நேற்று நடந்தது. விழாவை ஓட்டி, காலை, 9:30 மணிக்கு, பெண்கள் பால்குடம் ஏந்தியவாறு ஊர்வலமாக கோவில் வளாகத்திற்கு வந்தனர். பின்னர், மூலவருக்கு, பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வடை மாலை, துளசி மாலை அணிவித்து, தீபாராதனை நடந்தது. மாலை, 4:00 மணி முதல், 6:00 மணி வரை, பஜனை குழுவினரால் பக்தி பாடல்கள் பாடப்பட்டன. இதில், திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.