ஆழ்வார்திருநகரி: தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பிடம் வகிக்கும் முத்துமாலை அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை விழா நடந்தது. நவகைலாச ஸ்தலமான தென்திருப்பேரை சிவன் கோயிலில் பவுர்ணமி பூஜை மற்றும் திருகார்த்திகைவிழா தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் அழகிய பொன்னம்மை சமேத கைலாசநாதர் கோயில் நடந்தது. இக்கோயில் நவகைலாச ஸ்தலத்தில் புதன் அம்சமானது. இங்கு திருக் கார்த்திகை விழா மற்றும் பவுர்ணமி பூஜை திருவிழாவுக்கு வழிபாடு நடந்தது. சுவாமி மற்றும் அம்பாள் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. பின்னர் கோயில் அருகே சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சிவராம் பிரபு செய்திருந்தார்.