திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதம் துவங்கினர். கார்த்திகை முதல் தேதி பிறந்ததும் சபரி மலைக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பது வழக்கம். இந்தாண்டு நேற்று கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு சபரி மலைக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் மாலை அணிவதற்கு முருகன் கோயிலில் குவிந்தனர். அதிகாலை பெய்த மழையையும் பொருப்படுத்தாது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி குருசாமிகள் மூலம் கோவில் கொடி மரம் அருகிலும் மற்ற சன்னதிகளின் முன்பும், தூண்டிகை விநாயகர் கோயிலிலும் மாலை அணிந்து விரதம் துவக்கினர். இதனால் கோயில் வளாகம் எங்கும் பக்தர்களின் சரண கோஷம் ஒலித்தது.