பதிவு செய்த நாள்
20
நவ
2013
10:11
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், சத்யசாயி பாபாவின் 88வது ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, வரும் 22ம் தேதி திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. பொள்ளாச்சி சத்யசாயி சேவா சமிதி சார்பில், சத்யசாயி பாபாவின் 88வது ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, பஜனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வாசவி மஹாலில் நடை பெறுகிறது.கடந்த 17ம் தேதி காலை 5:00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. தொடர்ந்து,நேற்றுமுன்தினம் காலை 5:00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், மாலை 6:00 மணிக்கு சிறப்பு சாயி பஜனையும் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 5:00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், காலை 10:00 மணிக்கு பஜனாஞ்சலி, மாலை 4:00 மணிக்கு ஹோமியோபதி மருத்துவ முகாமும், மாலை 6:00 மணிக்கு சாயி பஜனையும்; லலிதா சகஸ்ரநாம பாராயணமும் நடைபெற்றது.இன்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை, மாலை 6:00மணிக்கு சிறப்பு சாயி பஜன், அமிர்த கலசம் நிகழ்ச்சியும்; நாளை (21ம் தேதி) மாலை 5:00 மணிக்கு சிறப்பு சாயி பஜன் மற்றும் சாயி காயத்ரி ஜபமும் நடைபெறுகிறது.
வரும் 22ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, லட்சுமி குபேர பூஜை, துர்கா ஸப்த ஸதிபாராயணமும்; 23ம் தேதி காலை 6:00மணிக்கு சுக்த ஹோமம்; காலை 9:00 மணிக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், குழந்தைகளுக்கு புத்தாடை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும், காலை 9:30 மணிக்கு ரத்ததானமுகாம், மதியம் 12:00 மணிக்கு நாராயணசேவை, மாலை 4:30மணிக்கு சிறப்பு சாய் பஜன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும்; மாலை 5:30மணிக்கு சேவையின் மகத்துவம் என்ற தலைப்பில், சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. இரவு 7:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், மங்கள ஆரத்தியும் நடக்கிறது.