தியாகதுருகம்: தியாகதுருகம் துணை மின் நிலையம் அருகில், திருக்கோவிலூர் சாலையில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகில் விநாயகர் சன்னதியும் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் மூலவர் எதிரில் வைத்திருந்த பலிபீடம், விநாயகர் சன்னதியில் வைத்திருந்த மூஞ்சூரு சிலைகளை பெயர்த்து கீழே தள்ளினர். சுவாமி படங்களை உடைத்து அருகிலுள்ள முட்புதரில் வீசினர். மூலவர் சிலை வைத்துள்ள அறையின் பூட்டை உடைக்க முயன்றனர். நேற்று காலை பூசாரி அடுமை கோவிலுக்கு சென்ற போது சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருந் தன. தர்மகர்த்தா ராமுவிற்கு தகவல் தெரிவித்தார். பா.ஜ., நகர செயலாளர் சங்கருடன் சென்று போலீசில் புகார் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் தியாகதுருகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.