பதிவு செய்த நாள்
21
நவ
2013
02:11
கடையம் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டி ராமசாமி சீதாபிராட்டி, லட்சுமண சுவாமி, ஆஞ்சநேயர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நேற்று 20–ந்தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு நவக்கரக ஹோமம், 8 மணிக்கு சுதர்ஷண ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜையும், மதியம் பாபநாசத்திலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மதியம் 5 மணிக்கு வாஸ்து சாந்தியும், பிரவேச பலியும், 6.30 மணிக்கு, அங்குரர்ப்பணம், காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், முதல் கால யாகபூஜையும், தீபாரதனையும் நடைபெற்றது. 20–ந் தேதி நேற்று புதன்கிழமை காலை 6.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கி 7.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், திரவ்யா, ஸ்பர்ச, பூர்ணாஹுதியும் நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்கு மேல் ராமசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், தீபாரதனை, பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது.