Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆயுள் ஹோமத்தை வீட்டிலேயே செய்யலாமா? 21 விதை தூவுங்க! டிரான்ஸ்பர் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2013
12:11

*விவேகமுள்ள சிறந்த நண்பன் கடவுள் மட்டுமே. ஏனென்றால் நம்மை எப்போது அடிக்க வேண்டும். எப்போது அணைக்க வேண்டும் என்பது நன்கு தெரியும்.
*மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர்களின் பாராட்டுக்கு ஆசைப்படாமல் கவனமாக இரு.
*உன்னை ஒருவன் சித்திரவதை செய்யும்போது கூட, அவனிடம் கடவுளைப் பார். அப்போது தான் உனக்கு உண்மை ஞானம் கிடைத்திருக்கிறது என உணரலாம்.
*மனதை தூய்மையாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விடு. அவரே உனக்குள்ளிருக்கும் தீமையை அகற்றி விடுவார்.
*உலகில் கடவுளின் பார்வைக்கு அற்பமானது என்று எதுவுமில்லை. அதுபோல, உன் கண்களிலும் அற்பமானது என்று எதுவும் இருக்கக்கூடாது.
*உத்தமச் செயல்களைச் செய்ய நினைத்தால் உடனடியாகச் செய்து விடுவது நல்லது.
*பிறருக்காக வாழும் பொதுநலப் பண்பே, மனிதனுக்கு நன்மையை அளிக்கும்.
*சோர்வு உன்னை சோர்வடையச் செய்து விடக் கூடாது. அதிலிருந்து விலகி நின்று செயல்படக் கற்றுக் கொள்.
*கடவுளின் அருளாட்சியில் தீமையென்று எதுவுமே இல்லை. நலம் அல்லது நலம் தருவதற்கான முயற்சியாகவே எல்லாம் இருக்கிறது.
*அகங்காரத்தை அறவே ஒழித்தால் ஒழிய, கடவுளை நாம் அறிய முடியாது.
*ஆயிரக்கணக்கில் தடைகளையும், தோல்வியையும், துன்பத்தையும் சந்திக்காமல், வாழ்வில் நற்பேறுகளை அடைய முடியாது. தடைக்கற்களே படிக்கற்கள்.
*அன்பால் செய்யும் செயலே உயர்வானது.சிறிய எறும்பின் உயிரைக் காப்பது, ஒரு பேரரசை நிறுவுவதை விட மேலான செயல்.
*தியாகம் செய். ஆனால், தியாகம் செய்ய வேண்டும் என்பதற்காக இல்லாமல், கடவுளுக்காகவும், மனித குலத்திற்காகவும் செய்ய வேண்டும்.
*உன்னை நீயே சோதனைக்கு உள்ளாக்கு. அந்தப் போராட்டத்தால் உன் கீழ்நோக்கிய உந்துதல்களைத் தீர்த்து விடு.
*காலத்தைப் பற்றியோ, வெற்றி பெறுவதைப் பற்றியோ கவலைப்படாதே. உன் பங்களிப்பைச் சரியாகச் செய். கடமையைச் செய்வதில் தான் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது.
*லட்சியத்தை அடைய விரைந்து செயலாற்று. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் உழைத்தாலன்றி நம் லட்சியத்தை அடைய இயலாது.
*செல்வத்தைப் பறைசாற்றிப் பெருமைப்படுவது கூடாது. உன் எளிமையையும், அடக்கத்தையும் பிறர் பாராட்ட வேண்டும் என்று எண்ணாதே.
*உன்னைக் கடவுள் நேசிக்கும்படி செய்ய உன்னால் இயலவில்லை என்றால் அவரை உன்னுடன் போரிடவாவது செய்ய வை.
*பிறருடைய குறைகளைக் கவனித்தலும், அவர்களைக் குறை கூறித் திரிவதும் தீமையை விளைவிக்கும்.
*வம்பளக்கும் குணத்தை விட்டுவிடு. சாதனைக்கு எப்போதும் அது தடையாகவே இருக்கிறது.
*உன் மனதை வேண்டுமானால் சந்தேகிக்கலாம். ஆனால், கடவுள் உன்னை வழிநடத்துகிறார் என்பதில் சந்தேகம் கொள்வது கூடாது.
அரவிந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar