எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் வரும் 25ம் தேதி அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2013 10:11
எட்டயபுரம்: எட்டயபுரம் சமஸ்தானம் ஜோதிர்நாயகி சமேத எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் மகா தேவாஷ்டமி அன்னாபிஷேகம் அன்னம் பாலிப்பு விழா வரும் 25ல் சிறப்பு பூஜைகளுடன் நடக்கிறது. ஈசனுக்கு நல்லெண்ணெய்பஞ்சகவ்யம் பஞ்சாமிர்தம் (பழம், வெல்லம், நெ#, தேன், கல்கண்டு ஆகியவற்றின் கலவை) நெ#, பால், தயிர், தேன், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழச்சாறு இளநீர், சந்தனம் ஆகிய பதினோரு பொருட்களால் அபஷேகம் செய்வர். சிவபெருமான் பதினோருவடிவம் கொண்டவர் என்கிறது வேதம். வழிபாட்டில் அனைத்து கடவுளருக்கும் அபிஷேகம் உண்டு என்றாலும் ஈசனுக்கு மட்டுமே அன்னாபிஷேகம் நடக்கிறது. அன்னம் நமது உயிர்இளை உட்கொள்ளுவது நம் உடல் எனும் வேத விளக்கம் கவனத்திற்கு உரியது அன்னவடிவில் உள்ள இறைவனை வழிபட்டால் நம் உடலில் உயிரானது நீண்ட காலம் நிலைத்து நிற்கும். இந்நிலையில் எட்டயபுரம் சமஸ்தானம் ஜோதிர்நாயகி சமேத எட்டீஸ்வரமூர்த்தி கோயிலில் மகாதேவாஷ்டமி அன்னா பிஷேகம் அன்னம் பாலிப்புவிழா வரும் 25ல் மகாகணபதி பூஜையுடன் துவங்குகிறது. புண்ணியாவாஜனம், சங்கல்பம் கலசஆவாகணபூஜை வேதபாராயணம் ஹோமம் மகா அபஷேகம் அதையடுத்து எட்டீஸ்வரமூர்த்திக்கு அன்னாபிஷேகம் நடக்கும். அதையடுத்து லிங்கத்தில் ஒட்டியுள்ள ன்னத்தை நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்பதால் தெப்பக்குளத்தில் அன்ன நைவேத்தியம் சிறப்பு பூஜைகளுடன் நடக்கும். அதையடுத்து பக்தர்களுக்கு அன்னம் பாலிப்பு நடக்கும். ஏற்பாடுகளை எட்டயபரம் சமஸ்தானம் அன்னாபிஷேக திருபணி குழு இணைந்து செ#து வருகின்றனர்