காங்டாக்: உலக நாடுகள் பலவற்றிலிருந்து, புத்தர் பயன்படுத்திய பொருட்களை சேகரித்து, ஏற்படுத்தப் பட்டுள்ள கண்காட்சி, சிக்கிம் மாநிலத்தின் காங்டாக் நகரில் நேற்று கண்காட்சியாக வைக்கப்பட்டது. டிசம்பர், 1ம் தேதி வரை, இந்த கண்காட்சி இருக்கும். அதன் பின், அந்த நினைவுப் பொருட்கள், பீகாரின் புத்த கயா எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அமைக்கப்படும் சிலையின் உள்ளே வைக்கப் பட்டு வழிபாடு செய்யப்படும் என, சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி, முதல்வர், பவன்சாம்லிங் கூறினார்.