பதிவு செய்த நாள்
25
நவ
2013
10:11
தர்மபுரி: தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டையில் உள்ள தட்சிணகாசி காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா, இன்று (நவ., 25) நடக்கிறது. இதையொட்டி, காலை, 6 மணி முதல், 10.30 மணி வரை கணபதி ஹோமம், அஷ்ட பைரவ ஹோமம், கோ பூஜை, அஷ்டபூஜை, மஹா பூர்ணாஹூதியும், காலை, 10.30 மணிமுதல் லட்சார்ச்சனையும் நடக்கிறது. இரவு, 10.30 மணி முதல், 12 மணி வரை குருதி பூஜை, வரமிளகாய் யாகம், 108 லிட்டர் பால், தயிர், இளநீர், கரும்பு பால் கொண்ட மஹா அபிஷேகம், பைரவ அலங்காரம், மஹா தீபாராதனையும் நடக்கிறது. நாளை (நவ., 26) காலை, 6 மணிக்கு செண்டை மேளம், நாதஸ்வர கச்சேரியுடன் ஸ்வாமி திருவீதி உலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் குருக்கள் பிரபாகரன் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.