தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்த நாரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகம் நடந்தது. பலிபீடம் அருகில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி பக்தர்கள் தாலாட்டியபடி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து நடந்த மகாதீபாராதனையில் ஏராளமான பக்தர்கள், பிரதோஷ முறைப்படி கோவிலை வலம் வந்து வணங்கினர். குருக்கள் நாகராஜ், சோமு ஆகியோர் பூஜைகளை செய்தனர். இன்று (2ம் தேதி) மாலை 108 சங்காபிஷேக சிறப்பு பூஜை அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நடக்கிறது. அதேபோல் புக்குளம் சைலாசநாதர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில் ஏராளமான பெண்கள், விளக்கேற்றி வழிபாடு நடத்தினர்.