குழந்தைகள் நன்றாக படிக்கவில்லையே என்ற கவலை பல பெற்றோருக்கு இருக்கும். இவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு, ஐயப்பன் குழந்தையாக வளர்ந்த குளத்துப்புழை ஐயப்பன் கோயிலுக்கு சென்று வரலாம்.
தல வரலாறு : பரசுராமர் மலையாள பூமியில் அமைத்த கோயில் குளத்துப்புழை ஆகும். இங்குதான் ஐயப்பன் குழந்தை பருவத்தில் வளர்ந்ததாக சொல்லப்படுகிறது. கருவறையில் மிகச் சிறிய சிலா ரூபத்தில் தவழும் பாலகனாக காட்சி தருகிறார். இதகேற்ப சிறு குழந்தைகள் செல்லும் அளவிலேயே கர்ப்பக்கிரகமும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திருக்கோயிலின் உள்ளேயும் ஒரு சிறுவன் ஓடி விளையும் அளவுக்கு ஏற்ப தான் உள்வளாகமும் அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சம் : இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தால், பள்ளியில் சிறந்து விளங்குவார்கள் என்பது திடமான நம்பிக்கையாகும். குழந்தைவரம் வேண்டி வருவோரின் குறை தீர்க்கும் தலமாகவும் உள்ளது. கோயிலின் அருகே உள்ள நதியில் துள்ளிவிளையாடும் மீன்களுக்கு பக்தர்கள் பொரி வழங்கி மகிழ்கின்றனர். இங்குள்ள நாகதேவதைக்கு மஞ்சள் பூசி, நெய்தீபம்ஏற்றி வழிபட்டால், குழந்தைபாக்கியம் கிடைக்கும் என்றும், பிறந்த குழந்தைகள் கேள்விஞானத்தில் சிறந்து விளங்குவர் என்றும் நம்பிக்கை உள்ளது.
விஜயதசமி அன்று வித்யாரம்பம் எனப்படும் சடங்கு நடக்கிறது. நெல்மணியை பரப்பி புதிய அட்சரங்களை எழுத குழந்தைகளுக்கு அன்று சொல்லிக்கொடுகின்றனர். குழந்தைகளுக்கு அன்னம் ஊட்டுதல் என்ற சடங்கும் இதே நாளில் நடக்கிறது.
இருப்பிடம் : திருநெல்வேலி மாவட்டம், தென்காசியிலிருந்து 70 கி.மீ. தொலைவில் இந்த கோயில் உள்ளது. விழாக்காலங்களில் மட்டுமே பஸ்கள் அதிகமாகச் செல்லும். தென்காசி அருகிலுள்ள செங்கோட்டையிலிருந்து ஜீப்கள் மற்றும் வேன் மூலம் சென்றுவரலாம். கார்த்திகை மாதம் மண்டல பூஜை காலத்தில் இங்கும் விழா நடக்கும்.