குலசை.,கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2013 10:12
உடன்குடி: குலசை., முத்தாரம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான நல்ல குடிநீர் வசதிகள் செய்யம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி அனுமன்சேனா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். இந்து மக்கள் கட்சி அனுமன்சேனா உடன்குடி ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.உடன்குடி ஒன்றிய செயலாளர் குலசை செல்வன் தலைமை வகித்தார்.ஒன்றிய இளைஞர் அணித்தலைவர் ராஜா,தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் லிங்கவேல் ஆதித்தன்,உடன்குடி ஒன்றிய துணைத்தலைவர் மகாலிங்கம்,ஒன்றிய தலைவர் பாஸ்கர் ,உடன்குடி ஒன்றிய அமைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென் மாவட்ட தலைவர் ரவிகிருஷ்ணன் பேசினார்.அனுமன் சேனாவின் அகில பாரத மாநாடு வரும் 22ம் தேதி மணப்புரத்தில் நடக்கிறது.இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து அதிகளவில் தொண்டர்கள் கலந்துகொள்வது,குலசை முத்தாரம்மன்கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.வரும் பக்தர்களுக்கு நல்ல சுத்தமான குடிநீர் ,அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.