குளித்தலை: அய்யர்மலையில் ரோப்கார் திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டு கோள் விடுத்து உள்ளனர். பிரசித்தி பெற்ற இந்த மலையின் உச்சியில் 1,117 படிகளை தாண்டி ரெத்தினகிரீஸ்வரர், சுரும்பார் குழலி ஆகிய கோவில்கள் உள்ளன. வயதானவாகள் மலை உச்சிக்கு சென்று சுவாமியை தரிசிக்க முடியவில்லை எனவே ரோப்கார் அமைக்க வேண்டும் என்பது பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.