கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பாதுகாப்பு அதிகரிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2013 01:12
நாகர்கோவில்: பாபர்மசூதி இடிப்புதினம் நெருங்கிவருவதையொட்டி சர்வதேச சுற்றுலாதலமான, கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் மற்றும் படகுதுறையில் மெட்டல் டிடெக்டர் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் சபரிமலைசீசனைமுன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் கன்னியாகுமரி களைகட்டியுள்ளது. பக்தர்கள் கூட்டத்துடன் தீவிரவாதிகள் ஊடுருவலை கண்காணிக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டிச.6 பாபர்மசூதி தினம் நெருங்கிவரும் நிலையில் கோயிலில் நுழைவு வாயிலில் மெட்டல்டிடெக்டர் அமைக்கப்பட்டு பக்தர்கள் சோதனைசெய்யப்படுகின்றனர். பக்தர்கள் கைபை, காமிரா, பேக் போன்றவை கொண்டுசெல்ல தடைவதிக்கப்பட்டுள்ளது. இதுபோல சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலிலும் பக்தர்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். கன்னியாகுமரியில் கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவுமண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் பூம்புகார் படகுதுறையிலும் மெட்டல்டிடெக்டர் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி ஓட்டல்களில் தங்கும் சுற்றுலாபயணிகளை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.