Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கார்த்திகை மாத வழிபாடு! கஞ்சா நைவேத்யம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருவிதாங்கூர் அரண்மனை சிறப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2013
02:12

பகவான் ஐயப்பனை எடுத்தது, வளர்த்தது, கோயில் கட்டியது என எல்லாவற்றையும் பந்தளம் மன்னர் செய்தாலும், இன்று சபரிமலையில் திருவிதாங்கூர் அரண்மனைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறும் மகர சங்கரம வேளையில் பகவானுக்கு அபிஷேகம் செய்யப்படும் நெய் திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் ராஜ்யத்தின் கவடியார் அரண்மனையில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் சபரிமலையில் நிறைபுத்தரி என்னும் நிகழ்ச்சி நடக்கிறது. வயலில் விளைந்த நெற்கதிர்களை கோயிலில் நிறைப்பது நிறைபுத்தரி ஆகும். இதற்கான தேதியை இன்றும் திருவிதாங்கூர் அரண்மனைதான் நிச்சயம் செய்கிறது. ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மன்னரின் பிறந்தநாளை யொட்டி சபரிமலை நடை திறந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மன்னர் சித்திரை திருநாள்தான் கேரளாவில் கோயில் பிரவேச பிரகடனத்தை அமல் செய்தவர். இத்திருநாளை சித்திரை ஆட்டத்திருநாள் என்பர்.

கார்த்திகை, மார்கழி மாதத்தில் நடக்கும் மண்டல, மகர விளக்கு காலத்தில் நிறைவாக நடக்கும் மண்டல பூஜை தினத்தில் பகவானுக்கு அணிவிக்கப்படும் தங்கஅங்கி சித்திரை திருநாள் மகாராஜா பகவான் ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கியதாகும். இது 420 பவுன் எடை கொண்டது. இன்றைய மார்க்கெட்படி சுமார் 20 லட்சம் மதிப்புடையது இது. இப்படி சபரிமலை வரலாற்றில், திருவிதாங்கூர் அரண்மனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதே நேரம், பந்தளம் மன்னர் குடும்பத்துக்கு ஐயப்பனுக்கு திருவாபரணம் கொண்டு வருவதுடன், ஒவ்வொரு ஆண்டும் நடை திறந்து பூஜிக்க மன்னரின் அனுமதி கோரப்படுகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar