மாளிகைப்புறத்தம்மன் மகரவிளக்கன்று இரவிலும், அதற்கு மறுநாளும் பதினெட்டாம்படிக்கு ஊர்வலமாக வருகிறாள். ஐயப்பனை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆவலுடன் வரும் அவள், கன்னி ஐயப்பன்மார்களின் சரங்களைக் கண்டதும் மனமொடிந்து திரும்புவாள். அப்போது ஐயப்பன் இன்னும் பிரம்மச்சாரியாகவே இருக்கிறார் என்பதை எடுத்துக்கூறும் வகையிலும், ஐயப்பனின் சரிதத்தை சொல்லும் வகையிலும் நடத்தப்படும் நிகழ்ச்சியே பள்ளிவேட்டைவிளியாகும்.