பொதுவாக இந்து கோயில்களுக்குள் அனைத்து மதத்தினரும் அனுமதிக்கப்பட்டாலு<ம், கருவறை பகுதிக்கு செல்ல இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த கட்டுப்பாடு இல்லை. அனைத்து மதத்தினரும் விரதம் இருந்து இருமுடி கட்டுடன் வந்தால், 18 படியேறி ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.