Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பன்னிரு திருமுறை இசை விழா துவக்கம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம்
எழுத்தின் அளவு:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம்

பதிவு செய்த நாள்

23 மார்
2026
12:03

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த உற்சவம் நடக்கிறது.


வசந்த உற்சவம்


வசந்த காலம் என்பது குளிர்காலத்துக்கும் கோடைக் காலத்துக்கும் இடைப்பட்ட பருவம் ஆகும். பொதுவாக 2. மார்ச், ஏப்ரல் மற்றும் மே. ஜூன் மாதம் வரை (தமிழ் மாதங்களில் பங்குனி, சித் ள் திரை, வைகாசி) நீடிக்கும். வசந்த காலத்தில் மலர்கள் பூக்கும். இயற்கை புத்துயிர் பெறும்.

வசந்த காலத்தில் கோவில் களில் விழா எடுக்கப்படு கிறது. அந்த விழாவில் வாச னைமிக்க பூக்கள், பலவித பழங்கள் தெய்வங்களுக்கு சமர்ப்பிப்பது முக்கிய அம்சமாகும்.

அதேபோல் திருப்பதி ஏழு மலையான் கோவிலில் வரு கிற 30 முதல் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி வரை 3 நாட்கள் வரு டாந்திர வசந்த உற்சவம் நடக் கிறது. இந்த உற்சவம் வசந்த காலத்தில் நடப்பதால் வசந்த உற்சவம் எனப்படுகிறது.


தங்கத்தேரோட்டம்


வசந்த உற்சவத்தை யொட்டி முதல் நாளான 30-ந்தேதி காலை 6.30 மணிக்கு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்து, பின்னர் வசந்த உற்சவ மண்டபத்தில் எழுந்தருள்கி றார்கள். அங்கு அபிஷேகம், நைவேத்தியம் முடிந்த பின் மீண்டும் கோவிலுக்கு திரும்புகிறார்கள்.

2-வது நாளான 31-ந்தேதி காலை 8 முதல் 10 மணி வரை │உற்சவர் மலையப்பசாமி தங் கத்தேரில் எழுந்தருளி கோவி |லின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து, பின்னர் வசந்த மண்டபத்தை அடைகிறார். அங்கு, அர்ச்சகர்கள் வசந்த உற்சவத்தை நடத்துகிறார்கள்.


அபிஷேகம்


இறுதி நாளான ஏப்ரல் 1-ந்தேதி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமி, சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், ஸ்ரீகி ருஷ்ணர் தனித்தனி தங்கத்திருச்சி வாகனங்களில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து வசந்த மண்டபத்தை அடைகிறார்கள். அங்கு உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகம் நடக்கிறது. அதன் பிறகு மாலை நேரத்தில் வசந்த மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கோவிலை அடைகின்றனர்.

ஒவ்வொரு நாளும் மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணிவரை ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது. அதில் மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. மாலை 6 மணியில் இருந்து 6.30 வரை ஆஸ்தானம் நடக்கிறது.


ஆர்ஜித சேவைகள் ரத்து


வசந்த உற்சவத்தை முன்னிட்டு வருகிற 30 முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை 3 நாட்கள் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்ச /வம், சகஸ்ர தீப அலங்கார சேவைரத்து செய்யப்பட்டுள்ளன. வருகிற 31-ந்தேதி அஷ்ட தள பாத பத்மாராதனை சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar