Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் ... திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பன்னிரு திருமுறை இசை விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பன்னிரு திருமுறை இசை விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

23 மார்
2026
09:03

தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்தும், 20வது பன்னிரு திருமுறை இரண்டு நாள் இசை விழா, தி.நகர் கிருஷ்ண கான சபாவில் நேற்று துவங்கியது.


துவக்க விழாவில், திருத்தணி சுவாமிநாதனுக்கு, ‘திருமுறை இசை வித்தகர்’ விருதை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணை தலைவர், டாக்டர் சுதா சேஷய்யன் வழங்கினார். விழாவில், சுதாசேஷய்யன் பேசியதாவது:


இறைவனையே இசையாக பார்ப்பது நம் பாரம்பரியம். அந்த வகையில், திருமுறை இசை விழா நம் பாரம்பரியத்தை, நாம் அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சி. திருமுறையில் என்ன இருக்கிறது என்று யாராவது கேட்டால், என்ன இல்லை என்று துணிச்சலாக கேட்கலாம்.


திருமுறைகளை தெய்வமாக கொண்டாடுகிறோம். சில கோவில்களில் திருமுறைக்கு தனி சன்னிதி உண்டு. தெய்வம், தெய்வீகம் என்று வழிபட்டு, திருமுறையில் இருப்பவற்றை நம் வாழ்க்கையில் பயன்படுத்த முடியும் என்பதை மறந்துவிட்டோம்.


திருமுறைகள், நாம் வாழ பல வழிகளை காட்டும் என்பதை, நம் அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


நிகழ்வில், தருமையாதீன புலவர் பணசை மூர்த்தி சொற்பொழிவும், கிரிஜா ராமசாமி, திருத்தணி சுவாமிநாதன், ஜே.பி.கீர்த்தனா, ஈஸ்வரன் – ஸ்ரீவித்யா சந்திரசேகர் ஆகியோரின் தேவார இன்னிசை நடந்தது.


நிகழ்வில், தேவ ஆகம தமிழிசை மன்ற அமைப்பாளர் சுவாமிநாதன், ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, பிள்ளையார்பட்டி கோவில் தலைமை அர்ச்சகர் பிச்சைக் குருக்கள், கிருஷ்ண கான சபா செயலர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பன்னிசை திருமுறை இசை விழா இன்று நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில், பங்குனி உத்தர பிரம்மோத்சவ திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar