Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொள்ளாச்சியில் சங்கீத ஆராதனை விழா! சபரிமலையில் நாளை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யப்பன் சேவையில் அதிவிரைவு படை அழுக்கு விளக்கை "ஜொலிக்க வைத்தனர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2013
11:12

சபரிமலை: சபரிமலை சேவையில், மத்திய ரிசர்வ் போலீசின் அதிவிரைவு படையினர் ஈடுபட்டுள்ளனர். சபரிமலையில் பாதுகாப்பு பணியில், சில ஆண்டுகளாக மத்திய ரிசர்வ் போலீசின் அதிவிரைவு படையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், கோவிலின் பாதுகாப்பு பணிகள் மட்டுமல்லாமல், கூட்டத்தை கட்டுப்படுத்துவது, 18 படியில் பக்தர்களை ஏற்றுவது போன்ற பணிகளிலும் ஈடுபடுகின்றனர். சபரிமலையை சுத்தமாக பராமரிக்க தொடங்கப்பட்டுள்ள, "புண்ணியம் பூங்காவனம் திட்டத்தில் இவர்கள் ஈடுபட்டு, தினமும் ஒரு மணி நேரம் குப்பைகளை அள்ளுகின்றனர். சன்னிதானத்தின் முன்புறம், அடுக்கு விளக்கு உள்ளது. கார்த்திகை தீபம், மண்டல பூஜை, மகரவிளக்கு போன்ற முக்கியமான நாட்களில், இந்த விளக்கு ஏற்றப்படும். அழுக்கடைந்திருந்த இந்த விளக்குகளை, நேற்று, மத்திய அதிவிரைவு படையினர் கழற்றி, எலுமிச்சை, தேங்காய் நார் உதவியால், ஒரு மணி நேரம் சுத்தம் செய்தனர். "இதுபோன்ற பணிகளை, சபரிமலையில் செய்ய வாய்ப்பு கிடைத்தது, மிக பெரிய பாக்கியம்; இது அய்யப்பனுக்கு செய்யும் சேவை என, அவர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar