சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2013 12:12
சிதம்பரம் நடராஜர்கோவிலில்பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சிதம்பரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவில் நுழைவு வாயில் முன்பு போலீசார் பக்தர்களின் உடமைகளை மெட்டல் டிடக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே கோவிலுக்குள் அனுமதித்தனர். இதேபோல், சிதம்பரம் ரெயில் நிலையம், கொள்ளிடம் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் துப்பாக்கி ஏந்தி போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கொள்ளிடம் மேம்பாலம் முதல் கடலூர் ரெயில்வே தண்டவாள இருப்பு பாதைகள் பகுதிகளில் ரெயில்வே போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர்.