பதிவு செய்த நாள்
07
டிச
2013
02:12
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன் கோவிலில் ஐயப்பனுக்கு விசேஷ அபிஷேகம், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு காமாட்சி அம்மன் கோவிலில் ஐயப்ப சாமிக்கு 4ஆம் ஆண்டு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. டிச 6; 7:00 மணிக்கு சித்தி வினாயகருக்கு அபிஷேக வழிபாடும், 9:00 மணிக்கு பால், நெய், பஞ்சாமிர்தம், பழ வகைகள், தேன், நெய், தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, எலுமிச்சம்சாறு, இளநீர், சந்தனம், வெட்டி வேர் உள்ளிட்ட விசேஷ திரவியங்களால் மஹா அபிஷேகமும், 20 வகை மலர்கள், துளசி உள்ளிட்ட மாலைகளால் அலங்காரமும் செய்தனர். மகாதீபாராதனைக்குப்பின் அன்னதானம் நடந்தது. வழிபாடுகளை அம்பிகேஸ்வரன் குருக்கள் செய்து வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை கமலா நேரு தெரு ஐயப்ப குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.