விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதூர் ஏழை மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள அய்யப்ப சுவாமிக்கு வார பூஜைகள் நடந்தது.விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு அய்யப்ப சுவாமிக்கு தேன், பால், நெய், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு புஷ்ப அலங்காரத்தில் அய்யப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இரவு 8:00 மணிக்கு அய்யப்ப பக்தர்களின் பஜனை பாடல்கள், 8:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சூரி குருசாமி தலைமையில் செந்தில், கணேசன், ஜோதிபாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.