திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவிலில் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு நடந்தது.திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவிலில், திருக்கோவிலூர் பயிற்சி மையம் சார்பில் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு நடந்தது. காலை 9 மணிக்கு மெய்கண்டாருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.காலை 10:30 மணிக்கு பேராசிரியர் முருகப்பன், சுந்தரர் வரலாறு குறித்தும், ஏழாம்திருமுறை குறித்தும் விளக்கமளித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கண்ணன், அம்பலவாணத்தம்பிரான் செய்திருந்தனர்.