மாமல்லபுரம்: வாயலுார் கிழக்கு கடற்கரை சாலை அருகில், பழமையான கிராம கோவிலான செல்லியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில், அம்மன் சன்னிதி மட்டும் இருந்தது. மகாமண்டபம் அமைக்க முடிவெடுத்த பொதுமக்கள், நன்கொடை மூலம் தற்போது மண்டபம் கட்டி, கோவிலுக்கு புதிதாக வண்ணம் தீட்டி திருப்பணி செய்தனர். அதைத்தொடர்ந்து மகாகும்பாபிஷேகத்திற்காக, கடந்த 7ம் தேதி கணபதி ஹோமத்துடன், முதல்கால பூஜை துவங்கி, நேற்று காலை நான்காம் கால பூஜை முடிந்து, 10:15 மணிக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது.