பதிவு செய்த நாள்
10
டிச
2013
11:12
சேலம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுகா, வி.மன்னார்பாளையம், புது ஏரி, விலாரிபாளையம், பரவக்காடு, பொன்னாரம்பட்டி, அணைக்கட்டு ஆகிய ஐந்து ஊர்களை சுற்றியுள்ள நீலமலையில், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ நாராயணப் பெருமாள், ஸ்ரீ ஜெய் ஆஞ்சநேயர், 60 அடி உயர சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, பணம், கம்பி, சிமென்ட், மணல், ஜல்லி ஆகியவற்றை பக்தர்கள் கொடுத்து உதவ வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினர், பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் சிலை அமைக்க உதவ விரும்புவோர், வி.மன்னார்பாளையம் பூசாரியை, 88079 00361 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.