பதிவு செய்த நாள்
10
டிச
2013
04:12
பாசத்துடன் பழகும் கன்னி ராசி அன்பர்களே!
இந்த மாதம் முழுவதும் சுக்கிரன் நன்மை தருவார். ஜன.2 வரை புதனும் சாதகமாக உள்ளார். சுக்கிரன் ராசிக்கு 5-ம் இடமான மகரத்தில் இருப்பதால் பெரியோர்ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். புதன் ராசிக்கு 4ம் இடமான தனுசில் இருக்கிறார். அவரால் வீட்டில் புதிய பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஜன.2ல் இடம்மாறி 5ம் இடமான மகரத்திற்கு செல்கிறார். அவரால் குடும்பத்தை விட்டு பிரிந்து தொழில் ரீதியாக வெளியூர் செல்ல நேரிடலாம்.மற்ற கிரகங்கள் சாதகமாக இல்லை என்றாலும், குரு,சனியின் பார்வை சாதகமான அமைந்துள்ளன. சனி, ராகுவின் மீது குரு பார்வை விழுவதால் கெடுபலன் குறையும். மாறாக நன்மை தரவே வாய்ப்பு உண்டு. எனவே இந்த மாதம் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் மிகவும் ஆதரவாக இருப்பர். சுப நிகழ்ச்சிகள் அரங்கேறும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பர். ஜன.5,6 நன்மை தரும் நாட்களாக அமையும்.தொழில், வியாபாரம் சிறப்படையும். ஜன.2 வரை கூடுதல் வருமானம் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.தெரியாத நபரோடு நெருங்கி பழகுவது நல்லதல்ல. பெண்களால் தொல்லை வர வாய்ப்பு உண்டு. அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். செவ்வாயால் முயற்சிகளில் தடைகள் வரலாம். அரசியல்வாதிகள் சிறப்பான நிலையில் இருப்பர். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காணலாம். அக்கறையுடன் படிப்பது உங்களை சிறந்த நிலைக்கு கொண்டு செல்லும்.விவசாயிகளுக்கு கால்நடை செல்வம் பெருகும். வழக்கு விவகாரத்தில் மெத்தனமாக இருக்க வேண்டாம். பெண்கள் புத்தாடை, அணிகலன்கள் பெற்று குதூகலம் அடைவர். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள். உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்ட எண்: 4,8 நிறம்: வெள்ளை, மஞ்சள்
நல்ல நாள்: டிச.18,19,20,21,25, 26,29,30,31,ஜன.5, 6,7,8
கவனநாள்: ஜன.9,10 சந்திராஷ்டமம்
வழிபாடு: ஞாயிறன்று ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வாருங்கள். முருகனையும் வழிபடுங்கள். புதனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.