பதிவு செய்த நாள்
10
டிச
2013
04:12
நற்குணம் மிக்க சிம்ம ராசி அன்பர்களே!
இந்த மாதம் உங்கள் ராசிக்கு 11ல் குரு, 3-ல் சனி, ராகு நன்மை தருவார்கள். சனி 3 ல் இருந்து பொருளாதார வளத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும், தொழில் விருத்தியையும் தந்து கொண்டு இருக்கிறார்.புதன் தனுசில் இருப்பதால் நன்மை தர மாட்டார். அவரால் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். ஜன.2 க்கு பிறகு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். எடுத்த காரியம் வெற்றி அடையும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.குடும்ப தேவைகள் பூர்த்தி ஆகும். அத்தியாவசிய பொருட்கள் தாராளமாக கிடைக்கும். குருவால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். ஜன.2க்கு பிறகு புதிய பதவி கிடைக்கும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். தொழில், வியாபாரத்தில் பகைவர் தொல்லை அதிகரிக்கும். டிச.31 க்கு பிறகு தடையின்றி முன்னேற்றம் காணலாம். ஜன.3,4ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பெண்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் ஜன.2க்கு பிறகு நீங்கும். கலைஞர்களுக்கு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். அரசியல்வாதிகள், பொது நல சேவகர்கள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது. மாணவர்கள் அதிக அக்கறை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். நட்பு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று நடப்பது நல்லது.விவசாயிகள் போதிய மகசூலை பெறுவர். கடின உழைப்பால் பலன் பெற வேண்டியது இருக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம் பெண்கள் கணவரின் பேச்சுக்கு மதிப்பளிப்பது நல்லது. கணவன், குடும்பத்தாரிடம் விட்டுக்கொடுத்து போகவும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். சூரியனால் உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். வயிறு தொடர்பான சிறு பிரச்னை வரலாம்.
அதிர்ஷ்ட எண்: 7,8 நிறம்: மஞ்சள், கருப்பு
நல்ல நாள்: டிச.16,17,18,19, 22, 23, 24, 27, 28, ஜன.3,4, 5,6,11, 12, 13
கவன நாள்: ஜன.7,8 சந்திராஷ்டமம்
வழிபாடு: பைரவர் வழிபாடு தைரியத்தை கொடுக்கும். முருகன்,பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். வெள்ளியன்று சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சூரியனை காலையில் வணங்குங்கள்.