பதிவு செய்த நாள்
10
டிச
2013
04:12
கவுரவம் மிக்க துலாம் ராசி அன்பர்களே!
மாத பிற்பகுதியில் நல்ல முன்னேற்றம் காணலாம். ஜன.2ல் புதன் சாதகமான இடத்திற்கு வருகிறார். அவரால் பணம் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் ராசி நாயகன் சுக்கிரனால் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏற்படும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். சூரியன், குரு மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பார்கள். சனியின்7ம் இடத்துப் பார்வையாலும், குருவின்9ம் இடத்துப் பார்வையாலும் எந்த சிக்கலையும் முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.சூரியனால் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பாக இருக்கும். உடல் நலம் சிறப்படையும்.பெண்களால் பொருள் சேரும். ஜன.1 வரை புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால், பகைவர்களால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். பணியாளர்கள் மாதத் தொடக்கத்தில் அதிக சிரத்தை எடுத்தே பணியாற்ற வேண்டியிருக்கும். உங்கள் வேலையை நீங்களே கவனமாக முடித்து விடுங்கள். இல்லாதபட்சத்தில், தேவையற்ற பிரச்னைகளை சந்திக்கும் நிலை வரலாம். ஜன.2க்கு பிறகு கோரிக்கைகள் நிறைவேறும். தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு கேதுவால் அலைச்சல் ஏற்படும். போட்டியாளர்கள் இடையூறு வரலாம். ஜன.2க்கு பிறகு அதிக லாபம் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று புகழும், பாராட்டும் கிடைக்கப் பெறுவர். பொது நல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. மாணவர்கள் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காணலாம். புதிய சொத்து வாங்கும் திட்டம் தள்ளி போகும். பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.
அதிர்ஷ்ட எண்: 7,9 நிறம்: செந்தூரம், வெள்ளை, பச்சை.
நல்ல நாள்: டிச.20,21, 22, 23, 24, 27, 28, ஜன.1,2,7,8,9,10.
கவன நாள்: டிச.16,17, ஜன.11.12.13 சந்திராஷ்டமம்.
வழிபாடு: சனிக்கிழமை பெருமாளையும், வியாழக்கிழமை சிவனையும் வழிபடுங்கள். முருகன் கோயிலுக்கு செல்லத் தவறாதீர்கள். புதனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.